சினிமா

முதன் முறையாக வெளியான தாமிரபரணி நடிகை மகள் புகைப்படம்! இதோ.

Summary:

banu-daughter photo

தமிழ் சினிமாவில் விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தவர் பானு.இவர் மலையாள சினிமாவுக்காக முக்தா ஜார்ஜ் என பெயர் மாற்றிக்கொண்டார். தமிழில் நடிப்பதற்காக பானு என மாற்றிக்கொண்டார்.  தாமிரபரணி பாணுவாகத்தான் இவரை ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

தாமிரபரணி படத்துக்குப் பிறகு அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. அதனால் ஓரிரு படங்களில் நடித்தவர், பின்னர் மலையாள படங்களில் கவனம் செலுத்தினார்.அதன் பிறகு, சட்டப்படி குற்றம் என்ற படத்துக்காக, மீண்டும் தமிழுக்கு வந்த பானு, மூன்றுபேர் மூன்று காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அவையும் பெரியளவில் வெற்றி பெறாததால் மலையாளத்தில் தான் கவனம் செலுத்தி வந்தார். 

மீண்டும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தார். கடந்த ஆண்டு வெளியான பாம்பு சட்டை படத்தில் பாபி சிம்ஹாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார் பானு.

திருமணம் ஆனாலும், சினிமாவிலிருந்து முழுமையாக ஒதுங்காமல் நடித்து வருகிறார்.  குடும்ப வாழ்க்கையில் நுழைய விரும்பிய இவருக்கு, 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மலையாள சினிமாவில் பாடகியும், தொகுப்பாளினியுமான ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியைத்தான் பாணு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தொடர்புடைய படம்

திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்த இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கியாரா எனப் பெயர் சூட்டியுள்ளனர். குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் பானு.


 


Advertisement