அட, போனவருஷம் பிக்பாஸ் பாலா தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ இதோ!

பிக்பாஸ் பாலா கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.


Bala birthday celebration video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் நான்கில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் பாலாஜி. மாடலான இவர் 2018 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றார். 

இவர் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரிடமும் முகத்துக்கு நேராக பேசக்கூடியவர். எதையும் யோசிக்காமல் முரட்டுத்தனமாக கோபப்பட கூடியவர். பலர்  இவரை விரும்பினாலும் சிலர் இவர் குறித்த மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லோருக்கும் டப் கொடுக்கும் போட்டியாளராகவே இருந்துவரும் பாலாவின் பிறந்தநாள் நேற்று பிக்பாஸ் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினர். இந்நிலையில் இந்த 
 வீடியோ நேற்று வெளியாகி வைரலான நிலையில், ரசிகர்கள் பாலா கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் ஜாலியாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.