பட்டாம்பூச்சி போல் பறக்கும் நடிகை பேபி அனிக்கா! லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்

பட்டாம்பூச்சி போல் பறக்கும் நடிகை பேபி அனிக்கா! லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்


Baby anika latest instagram photo butterfly looks

நடிகை பேபி அனிக்காவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தவர் பேபி அனிகா. என்னை அறிந்தால் படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்றார் அனிக்கா. இவரது பெயரையும், புகழையும் மேலும் அதிகரிக்கும்வகையில் மீண்டும் அஜித்துக்கு மகளாக முக்கியமான கதாபாத்திரத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து மேலும் வரவேற்பை பெற்றார்.

Anika

சினிமாவில் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் இவர் தற்போது சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வைரலாகிவருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு பல நேரங்களில் ரசிகர்கள் சற்று சர்ச்சையான கமெண்டுகளை பதிவிட்டுவந்தாலும், புகைப்படம் வெளியிடுவதை மட்டும் இவர் நிறுத்தவே இல்லை.

அந்தவகையில் தற்போது பட்டம் பூச்சி போல் சிறகடித்து பறப்பதுபோல் புகைப்படம் ஒன்றை வெளியிட, இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.