சினிமா

திடீரென ஆயுத எழுத்து சீரியலை நிறுத்தியது ஏன்? ஷாக்காகி கேள்வியெழுப்பிய ரடிகர்களுக்காக நாயகி சரண்யா வெளியிட்ட வீடியோ!

Summary:

Ayutha yeluthu seerial stopped

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வந்த தொடர் ஆயுத எழுத்து. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல்கள் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சில காலங்கள் ஒளிபரப்பாமல் இருந்தது. 

பின்னர் சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்பு தொடங்கபட்ட நிலையில் ஆயுத எழுத்து சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரில் துவக்கத்தில் ஸ்ரீத்து மற்றும் அஹ்மத் கான் இருவரும் நடித்து வந்தனர். பின்னர் ஒரு சில காரணங்களால் இருவரும் பாதியிலேயே விலகிய நிலையில் சரண்யா மற்றும் ஆனந்த் இருவரும் நடித்து வந்தனர். 

இந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த ஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டது.  இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் இதுகுறித்து சீரியல் நாயகி சரண்யாவிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். 

இந்நிலையில் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உண்மையிலேயே ஆயுத எழுத்து சீரியல் நிறுத்தப்பட்டது ஏன் என எனக்கே தெரியாது. இது குறித்து எனக்கு தெரிந்ததும், நானே அதை உங்களிடம் சொல்கிறேன். விரைவில் ஒரு நல்ல தொடரில் நான் உங்களை சந்திக்கிறேன். உங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.


Advertisement