படப்பிடிப்பின் போது அட்லியிடம் விஜய் கூறிய விஷயம்.! ஆச்சரியமடைந்த அட்லி..

படப்பிடிப்பின் போது அட்லியிடம் விஜய் கூறிய விஷயம்.! ஆச்சரியமடைந்த அட்லி..


atlee-openup-about-vijay

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லீ. ஷங்கரிடம் எந்திரன் மற்றும் நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதையடுத்து 2013ம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, ஜெய் ஆகியோர் நடித்த "ராஜா ராணி" திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

Nanban

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு தெறி, 2017ஆம் ஆண்டு மெர்சல் 2019ஆம் ஆண்டு பிகில் என மூன்று படங்களை விஜயை வைத்து இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றன. 

சமீபத்தில் ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய நேரடி ஹிந்தி திரைப்படம் "ஜவான்" உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து பாலிவுட்டிலும் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியுள்ள அட்லீ, சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார்.

Nanban

அதில் அவர், "நண்பன் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் என்னை அழைத்தார். உங்களை கவனித்தேன். ரொம்ப ஆக்டிவா வேலை பாக்குறீங்க. நல்ல கதை இருந்தா சொல்லுங்க. நாம சேர்ந்து படம் பண்ணுவோம் என்று கூறினார். விஜய் தான் என்னுடன் பணியாற்ற விரும்பிய முதல் ஹீரோ" என்று கூறியுள்ளார் அட்லீ.