நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
மீண்டும் இணைகிறதா இந்த வெற்றி கூட்டணி?? வெளியான முக்கிய தகவல்! சர்பிரைசில் தளபதி ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் செம ஹிட்டாகி வெற்றி கூட்டணியாக இருப்பது தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ கூட்டணிதான். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. இந்த மூன்று திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பெரும் வசூல் சாதனையை படைத்தது.
இதனைத் தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அட்லீயும் அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான தெறி திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 5 வருடங்கள் ஆகியுள்ளது. அதனை முன்னிட்டு இயக்குனர் அட்லீ அப்படத்தில் பணியாற்றிய அனைவரும் நன்றி தெரிவித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் தமன் தெறி தனக்கு பிடித்த விஜய் அண்ணா படம், அடுத்தப்படத்திற்காக வெறியாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் இதற்கு அட்லீ விரைவில் ப்ரோ என கூறியுள்ளார், இதனால் விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணையஉள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்