இரண்டு நாள் தூங்ககூட முடியல ! PSBB பள்ளியின் முன்னாள் மாணவர், கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேதனையுடன் வெளியிட்ட பதிவு!!



aswin-tweet-about-psbb-school-issue

சென்னை கேகே நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்ரி பள்ளியில் கணக்கு பதிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பின் போது, அரைகுறை ஆடையுடன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும்,பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டதாகவும், ஆபாசமாக மெசேஜ் செய்ததாகவும் மாணவிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பலரும் அவருக்கு  கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதனை தொடந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் முன்னாள் மாணவரும், இந்திய அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரருமான அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், PSBBன் பழைய மாணவராக மட்டுமல்லாமல், 2 இளம் சிறுமிகளின் தந்தையாக இரு இரவுகள் மிகவும் கஷ்டமான மனநிலையிலேயே இருந்தேன். ராஜகோபாலன் என்ற ஒரு பெயர் இன்று வெளிவந்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க நாம் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.