சினிமா

அஸ்வினை பார்த்து ஷிவாங்கி இப்படி கேட்டாரா?? உருக்கமாக அவரே வெளியிட்ட பதிவு! ஃபீலான ரசிகர்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிகழ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள், கோமாளிகள் மட்டுமின்றி நடுவர்களும் ரகளைகள் செய்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பர். அதிலும் கோமாளிகளாக புகழ், பாலா, ஷிவாங்கி மணிமேகலை, சரத், சக்தி ஆகியோர் செய்யும் ரகளைகள் வேற லெவல்.

இந்நிலையில் செம ஜாலியாக  சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளது.  அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா, ஷகீலா ஆகியோர் இறுதிபோட்டிக்கு தகுதியாகியுள்ளனர். குக் வித் கோமாளியின் இறுதி நிகழ்ச்சிகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதியம் 2 மணி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து போட்டியாளரான அஸ்வின் அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது சக போட்டியாளர்கள் குறித்தும், கோமாளிகள் குறித்தும், அவர்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

அந்த பதிவில் அவர், நீங்க என்னை மிஸ் பண்ணுவீங்களா என ஷிவாங்கி கேட்டதை குறிப்பிட்டு  நான் உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் நாங்களும் உங்களையெல்லாம் ரொம்பவே மிஸ் செய்வோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 


Advertisement