அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!


aswin-miss-the-chance-of-acting-in-kiruthika-udhayanith

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் பல இளம்பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான அஸ்வின் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி என்ற தொடரில் நடித்து இருந்தார். 

மேலும் அவர் சில விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி அஸ்வின் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வினுக்கு படவாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. அவர் traident மீடியா தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக புகழும் இணைந்து நடிக்கவுள்ளார். பின்னர் அவர் லோனர் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் இதன் டீஸர் வெளியானது. 

aswin

அதனை தொடர்ந்து அஸ்வின் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் உருவாகும் படத்திலும் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது அப்படத்தில் அஸ்வினுக்கு பதிலாக மலையாள நடிகர் ஜெய்ராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.