சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் தனுஷின் சூப்பர் ஹிட் அசுரன் திரைப்படம்..! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் தனுஷின் சூப்பர் ஹிட் அசுரன் திரைப்படம்..! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!



Asuran movie remake in Chinese language

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரன் படம் சீனமொழியில் ரிமேக் செய்யப்பட்ட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது அசுரன் திரைப்படம். படத்தில் தனுஷ் ஏற்று நடித்திருந்த சிவசாமி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றது.

Asuran

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நீண்ட நாட்கள் திரையில் ஓடிய இந்த படம் சுமார் 100 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை புரிந்தது. இந்நிலையில் நரப்பா என்ற பெயரில் அசுரன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் சிவசாமி கேரக்டரில் நடிகர் வெங்கடேஷூம், மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் பிரியாமணியும் நடிக்கின்றனர்.

இதனிடையே அசுரன் திரைப்படம் சீனமொழியில் ரிமேக் செய்யப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக பாகுபலி, எந்திரன், 2.0 போன்ற படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டநிலையில், அசுரன் படம் ரீமேக் செய்ய இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.