சினிமா

அசுர வேகத்தில் பாயும் தனுஷ்; வெளியானது அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Summary:

Asuran movie first look

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘அசுரன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. 

‘வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் மீண்டும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. 

கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.


Advertisement