அசுர வேகத்தில் பாயும் தனுஷின் அசுரன் படம்! இதுவரை சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா!

அசுர வேகத்தில் பாயும் தனுஷின் அசுரன் படம்! இதுவரை சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா!


Asuran movie

வடசென்னை படத்தைத் தொடர்ந்து தனுஷ் மீண்டும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். 

பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Asuran

மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இப்படம் நேற்று மட்டும் சென்னையில் ரூ. 27 லட்சம் வசூலித்துள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை மொத்தமாக சென்னை வசூல் என்று பார்த்தால் படம் ரூ. 3.09 கோடி வரை வசூலித்திருக்கிறது.