தில்லானா தில்லானா பாட்டிற்கு குத்தாட்டம் போட்ட அசோக்செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன்.. வைரலாகும் வீடியோ.?

தில்லானா தில்லானா பாட்டிற்கு குத்தாட்டம் போட்ட அசோக்செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன்.. வைரலாகும் வீடியோ.?


ashok-selvan-and-keerthy-pandian-viral-video

2013ஆம் ஆண்டு "சூது ​​கவ்வும்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்பாவியான, நம்ம வீட்டுப்பையன் போன்ற முகத்தோற்றம் கொண்ட இவர், முதல் படத்திலேயே பெருமளவு ரசிகர்களைக் கவர்ந்தார்.

keerthi

தொடர்ந்து தெகிடி, பீட்சா2, கூட்டத்தில் ஒருவன், ஹாஸ்டல், ஓ மை கடவுளே, வானம், போர்த்தொழில் என்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் அசோக் செல்வன், தற்போது ப்ளூ ஸ்டார், சபாநாயகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ப்ளூ ஸ்டார் படத்தில் உடன் நடித்த கீர்த்தி பாண்டியனுடன் காதல் வயப்பட்ட அஷோக் செல்வன், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஓராண்டுக்கும் மேலாக காதலித்து இருவரும் வந்தது குறிப்பிடத்தக்கது.

keerthi

இந்நிலையில், அசோக் - கீர்த்தி திருமண புகைப்படங்களை பார்த்து, ரசிகைகள் பலரும் கீர்த்தியை உருவகேலி செய்து கமெண்ட் செய்தனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத இந்த ஜோடி, தங்களது திருமண வரவேற்பில் நடனம் ஆடிய வீடியோ தற்போது வைரலாக வருகிறது.