சினிமா

நான் இந்த அளவிற்கு மாற அஜித்தான் காரணம்! நெகிழ்ச்சியுடன் கூறிய பிரபல நடிகர்!! யார் தெரியுமா?

Summary:

arunvijay talk about ajith

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இதற்கென உலகமெங்கும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கு நடிகர் நடிகைகள் என பலரும் ரசிகர்களாக உள்ளனர். இவ்வாறு தல அஜித்தின் ரசிகராக இருப்பவர் அருண் விஜய்.

இவர் தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானார்.

arun vijay க்கான பட முடிவு

அதனை தொடர்ந்து சிறந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் அருண் விஜய் தற்போது தடம் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அருண் விஜய்யிடம் அஜித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அஜித் எனக்கு நண்பர் மட்டுமல்ல ஒரு சகோதரர் போல. அவர் ஒரு ஓபன் புக். அவரிடம் எந்த ரகசியமும் இருக்காது. அவர் ரசிகர்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்திருப்பவர். 

arun vijay with ajith க்கான பட முடிவு

அஜித்திடம் நிறைய விஷயங்கள் பற்றி பேசியுள்ளேன். அவர் கூறிய பல அறிவுறுத்தல்களை நான் ஏற்றுள்ளேன். அதுதான் எனது சிந்தனைகளை மாற்றியுள்ளது.என அவரை புகழ்ந்து கூறினார்.அஜித்தை குறித்து அருண் விஜய் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.