சினிமா

முன்னணி நடிகர்களை கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிட்டு கூறுங்கள்! அருண்விஜய் கூறிய கலக்கல் பதில்!

Summary:

Arun vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய், அஜித், ரஜினி, கமல். இவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் தனி தனியாக ரசிகர்கள் பட்டாளத்திற்கு என்று எதிர்பார்ப்புகள் இருக்க தான் செய்கிறது.

அந்த வகையில் தல அஜித்தின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து பிரபலமானவர் நடிகர் அருண் விஜய். அதனை பல குற்றம்23, தடம், செக்க சிவந்த வானம் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாகவுள்ள மாபியா படத்தின் ப்ரோமோசன் விழாவிற்கு சென்ற போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிட்டு கூறுங்கள் என்று கேட்டுள்ளனர். 

அதற்கு தகுந்தார் போல் நடிகர் அருண் விஜய் அவர்கள் விஜய் விராட் கோலி, தல அஜித் தல தோனி, ரஜினி சச்சின், கமல் கங்குலி என்ற கலக்கலான பதிலை கூறி அசத்தியுள்ளார். 


Advertisement