சினிமா

"அறிவும் அன்பும்" ஊரடங்கிலும் இணைந்த இசைக்குரல்கள்; கமலின் வரிகளில் உணர்வை தூண்டும் வீடியோ!

Summary:

Arivum anbum song released by kamal

நாடே ஊரங்கில் இருக்கும் இந்த சமயத்திலும் மக்களுக்கு எழுச்சியூட்டும் வகையில் கமல்ஹாசன் வரிகளில் ஜிப்ரான் இசையில் "அறிவும் அன்பும்" என்ற தலைப்பில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

"பொதுநலமென்பது தனி மனிதன் செய்வதே" என துவங்கும் இந்த பாடல் வரிகளை நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து பாடகர்களின் குரல்களை இணைத்து பாடலாக்கியுள்ளார்.

இந்த பாடலினை கமல், பாம்பே ஜெயஸ்ரீ, யுவன் சங்கர் ராஜா, சித்தார்த், சித்ஸ்ரீராம், சங்கர் மகா தேவன், ஸ்ருதிஹாசன், தேவி ஸ்ரீ பிரசாத், முகின் ராவ், ஆண்ட்ரியா போன்றோர் பாடியுள்ளனர். இந்த ஊரடங்கு சமயத்தில் கமல்ஹாசன் எடுத்துள்ள இத்தகைய முயற்சி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


Advertisement