மோசமான கமெண்டுகளை டெலீட் செய்த அர்ச்சனாவின் மகள்! கேலி செய்தவருக்கு கூறிய காரணத்தை கேட்டீர்களா!

மோசமான கமெண்டுகளை டெலீட் செய்த அர்ச்சனாவின் மகள்! கேலி செய்தவருக்கு கூறிய காரணத்தை கேட்டீர்களா!



archana-daughter-delete-bad-comments-in-social-media

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். பின்னர் டபுள் எவிக்சனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். 

அதனை தொடர்ந்து கடந்த வாரம் ஆரி, ரியோ, அர்ச்சனா, ஷிவானி, ஆஜித், அனிதா, சோம் ஆகியோர் நாமினேட்டான நிலையில்  அர்ச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் அர்ச்சனாவின் வெளியேற்றத்தை கேலி செய்தும்
விமர்சித்தும் பலரும் மோசமான கமெண்டுகளை வெளியிட்டிருந்தனர். அதற்கு அசராமல் பதிலளித்து வந்த அர்ச்சனாவின் மகள் சாரா தற்போது மோசமான கமெண்டுகளை எல்லாம் டெலீட் செய்துள்ளார்.

               zaara

இதுகுறித்து கிண்டலாக ரசிகர் ஒருவர் கேட்ட நிலையில், அதற்கு அவர் எனது அம்மா 67 நாட்கள் கழித்து வீட்டிற்கு வருகிறார்கள். இது போல மோசமான கமெண்டுகளை  எல்லாம் அவர் பார்த்து கவலைக்குள்ளாக நான் விரும்பவில்லை. அதனால் தான் அதை எல்லாம் டெலீட் செய்கிறேன் என்று பக்குவமாக கூறியுள்ளார்.