சினிமா Covid-19 Corono+

அவங்க மனசு எம்புட்டு வலிக்கும்.! அவங்கள திட்டாதீங்க..! உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ள அறந்தாங்கி நிஷா.!

Summary:

Arandhangi nisha inspirational video about corono situation

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதேபோல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டிற்கு சம்பாதிக்க சென்றுவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய நபர்களால்தான் கொரோனா அதிகம் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டுவந்த நிலையில், அவர்களுக்கு சவுக்கடி தரும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா.

தனது தாய் நாட்டையும், தனது சொந்தங்களையும் விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் கஷ்டங்களை தெளிவாக விளக்கியுள்ள நிஷா, நிச்சயம் கொரோனாவை பரப்பவேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் இங்கு வரவில்லை. எப்படியாவது நம்மது குடும்பத்துடன் சேர்ந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இங்கு வந்திருப்பார்கள்.

இப்படி ஒரு வைரஸ் அவர்கள் உடலில் இருப்பது தெரிந்திருந்தால் நிச்சயம் இந்த பக்கம் அவர்கள் வந்திருக்கவே மாட்டார்கள். குடும்பத்தை விட்டுட்டு தினம் தினம் கஷ்டப்படும் அவர்களை திட்டாதீர்கள், அவர்களது மனசு எவ்வளவு கஷ்டப்படும் என உணர்வு பூர்வமாக பேசியுள்ளார் அறந்தாங்கி நிஷா. இதோ அந்த வீடியோ.


Advertisement