அட.. ஏ.ஆர் ரஹ்மானா இது! இப்படியொரு லுக்கில் அவரை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டீங்க! முதன்முதலாக வெளிவந்த புகைப்படம்!!ar-rahman-with-mustache-look-photo-viral

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரஹ்மான். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிளிலும், ஏராளமான டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் ஏ.ஆர் ரஹ்மான் தனது பாடலால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு, வெற்றியின் உச்சம் தொட்டு தற்போது இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். மேலும் இவர் ஆஸ்கார் உட்பட ஏராளமான தேசிய  விருதுகளையும் வென்றுள்ளார். ஆஸ்கார் நாயகனான ஏ.ஆர் ரஹ்மான் தற்போது ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

 இந்த நிலையில் தற்போது ஏ.ஆர் ரஹ்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எப்பொழுதும் மீசை, தாடி இல்லாமல் கிளீன் ஷேவ் லுக்கில் இருக்கும் ஏ.ஆர் ரஹ்மான், ZoomMeeting app பில்டரை பயன்படுத்தி மீசை வைத்து இருப்பது போன்ற புதிய லுக்கில் உள்ளார். இதனைக் கண்டு ரசிகர்கள் பல விதமான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.