AR Rahman talk about oscar award
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்து, தற்போது முன்னணி இசையமைப்பாளராக ரசிகர்கள் மத்தியில் கொடிகட்டி பறப்பவர் ஏ.ஆர் ரஹ்மான். இவருக்கென இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் தனது பாடலுக்காக ஏராளமான தேசிய விருதுகளையும், ஆஸ்கர் விருதினையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அப்பொழுது பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்த ஏ.ஆர் ரஹ்மானிடம் ஆஸ்கர் விருது பெற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்பொழுது அவர், அதை ஒரு சிறந்த கவுரவமாக நினைக்கிறேன். எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் அது ஒரு ஆசிர்வாதம். ஆஸ்கர் விருது மூலம் பெயரும், மரியாதையும் கிடைத்தது. மேலும் ஆஸ்கர் விருது வாங்கியிருந்தாலும், நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள். அதன் பிறகுதான் கடுமையாக உழைத்தோம் என கூறியுள்ளார்.
Advertisement
Advertisement