இயக்குனர் முருகதாஸ் அடுத்த பட்டத்தின் ஹீரோ யார் தெரியுமா? ரசிகர்கள் கொண்டாட்டம்...!ar-murugadoss-next-movie-direct-actor-rajini

வெற்றி பட இயக்குநர் AR முருகதாஸ் என்றாலே ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். அவர் இயக்கும் படம்  சமூக அக்கறை உடன் எடுப்பார் மற்றும் நல்ல கருத்தும் சமூகத்தில் என்ன நடக்குது என்பதை வெளிப்படையாக எடுப்பார். இப்பொழுதும் மக்களிடம் கேட்டால் நமக்கு எல்லாம் பிடித்த படம் கேப்டன் விஜயகாந்த் நடித்த படம் ரமணா. அந்த படம் சமுகத்தின் அவலநிலையை மற்றும் மருத்துவமனையின் அவலத்தையும் அந்த   படத்தின் மூலம் அழகா இயக்கி  இருந்தார்.

அதற்கு பின்பு இளையதளபதி விஜயுடன் இணைந்து இயக்கிய படம் “கத்தி”காப்ரேட் கம்பேனிகளை குத்தி கிழித்தது. விவாசயிகளை மையமாக வெளிவந்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது முருகதாஸ் நடிகர் விஜயுடமன் மீண்டும் இணைந்து சர்கார் படத்தை இயக்கி அப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திலு ஏதாவது சமூக பிரச்சனைகளை கொண்டு வரலாம் இனத்தை இந்த படத்தின் தலைப்பிலே தெரிய வருகிறது. 

மேலும் இயக்குனர் முருகதாஸ் அவர்கள் அடுத்ததாக எந்த நடிகருடன் இணைந்து படம் பண்ணுவார் என்பது அனைவரிடமும் இருந்த கேள்வி தான். இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைத்து படம் பண்ண போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தெரிந்ததும் ரஜினி ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.