சினிமா

ஹாலிவுட் படத்தில் கால்பதிக்கும் பிரபல இயக்குனர் AR முருகதாஸ்! என்ன படம் தெரியுமா?

Summary:

AR murugadhas writing dialogue for Hollywood movie

தமிழ் என்று சொல்வதை விட, இந்திய அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் AR முருகதாஸ்.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களில் பல்வேறு மெகாஹிட் படங்களை கொடுத்துள்ளார் முருகதாஸ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான சர்க்கார் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், படம் மாபெரும் வெற்றிபெற்றது.

தற்போது சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் முருகதாஸ், இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் வேலையில் பிஸியாக இருக்கின்றார். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்பட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Image result for ar murugadoss

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் படத்திற்கு தமிழில் வசனம் எழுத இருக்கிறார் AR முருகதாஸ். அது என்ன படம் தெரியுமா? உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் Avengers Endgame .

’அவெஞ்சர்ஸ்’ பட வரிசையில் இப்போது உருவாகியுள்ள படம்,’அவஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ (Avengers: Endgame). ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருபலோ, கிறிஸ் எவான்ஸ் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ருசோ சகோதரர்களான, அந்தோனி ருசோ, ஜோ ருசோ இயக்கியுள்ளனர். 

ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்தியாவில் இந்தப் படம், ஆங்கிலத்துடன் இந்தி, தெலுங்கு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகிறது. இதில் தமிழ்ப் பதிப்புக்கான வசனத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதுகிறார்.


Advertisement