அட.. இவரு கொஞ்சம் வித்தியாசமான பொண்ணுதான்! அனுஷ்கா வெளியிட்ட சூப்பர் புகைப்படம்! வாழ்த்தும் ரசிகர்கள்!!

அட.. இவரு கொஞ்சம் வித்தியாசமான பொண்ணுதான்! அனுஷ்கா வெளியிட்ட சூப்பர் புகைப்படம்! வாழ்த்தும் ரசிகர்கள்!!


anushka-womens-day-photo-viral

தமிழ் சினிமாவில் ரெண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அனுஷ்கா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் நாடு முழுவதும் செம ஹிட்டானது. அனுஷ்கா 
இறுதியாக மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் மகளிர் தினமான இன்று நடிகைகள் பலரும் தங்களது செல்பி மற்றும் வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக் கூறி வரும் நிலையில், அனுஷ்கா வித்தியாசமாக தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.