சினிமா விளையாட்டு

அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கிறாரா! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

Summary:

anushka sharma is not pregnant

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, பாலிவுட் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மாவிற்கு திருமணமாகி ஒரு ஆண்டுகள் முடிந்துவிட்டன. பல நாட்களாக காதலித்து வந்த இருவரும் சென்ற வருடம் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் அவர்களது துறைகளில் இன்னும் சிறப்பாக தான் செயல்பட்டு வருகின்றனர்.

பெரும்பாலான நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் அனுஷ்கா சர்மா அப்படி இல்லை. அவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் பாரி, சஞ்சு, சூய் தாஹா போன்ற திரைப்படங்கள் வெளியாகின. மேலும் அவர் சமீபத்தில் ஷாருக்கானுடன் நடித்துள்ள ஜீரோ படம் வெளியாக உள்ளது. இதுகுறித்த விளம்பரங்களில் ஷாருக்கான் மற்றும் கேத்ரினா கைப் உடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார் அனுஷ்கா சர்மா.

தொடர்புடைய படம்

இந்நிலையில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கிறாரா, இல்லையா? என்பது குறித்து பல்வேறு வதந்திகள் வெளிவந்தன. அவர் கர்ப்பமாக இருக்கிறார் என பலரும் எழுத ஆரம்பித்தனர். இதுகுறித்து தற்போது பேசியுள்ள அனுஷ்கா சர்மா "வதந்திகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை. இன்னும் சிறிது காலத்திற்கு எங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை" என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய அவர், "நான் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டதற்கு பல காரணங்கள் உள்ளன. நீங்கள் வேண்டுமானால் திருமணத்தை மறைக்கலாம்; ஆனால் கர்ப்பமாக இருப்பதை யாராலும் மறைக்க முடியாது. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என பலர் கூறலாம். ஆனால் எப்படியும் நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் கூறியது பொய் என்று அவர்களுக்குத் தெரிய வரும். பிறகு வேறு ஒரு பிரபலத்தை பற்றி பேசுவதற்கு சென்றுவிடுவார்கள். அனைத்தும் செய்திகளை உருவாக்குவதற்கான திட்டமே" என மிகவும் ஆவேசத்துடன் பேசி உள்ளார் அனுஷ்கா சர்மா.


Advertisement