வந்த வேகத்திலேயே பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட அன்னபாரதி.! வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??annabharathi-salary-to-participate-in-bigboss-show

விஜய் தொலைக்காட்சியில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து பாவா செல்லத்துரை தானாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் விஜய் வர்மா,யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார்கள். இதற்கிடையில் நடிகர் தினேஷ், அன்னபாரதி, விஜே அர்ச்சனா, பிராவோ, கானா பாலா ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.

மேலும் பரபரப்பு போட்டியாளரான பிரதீப் ரெட் கார்டு  கொடுக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக கடந்த வாரம் உள்ளே வந்த அன்னபாரதி நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று நேற்று வெளியேறியுள்ளார். அன்னபாரதிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் பரவி வருகிறது அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்னபாரதிக்கு 20 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.