சினிமா

தனது திருமணம் குறித்த தகவலை வெளியிடாதது இதனால்தான்.! கண்ணீருடன் மனம்திறந்தார் அனிதா சம்பத்!!

Summary:

anitha sampath talk about her marriage life

பிரபலம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து இளைஞர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அனிதா சம்பத், மேலும் அவர் தற்போது வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதுமட்டுமின்றி சர்க்கார்,  வர்மா போன்ற படங்களிலும் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

அனிதாவின் அழகிற்கும்  இனிமையான பேச்சிற்கும்  ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவரை வர்ணித்து இளைஞர்கள் எக்கச்சக்கமான மீம்களை தெறிக்க விட்டு வந்தனர்.  இந்நிலையில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த அனிதா சம்பத் சில மாதங்களுக்கு முன்பு தனது காதலரான பிரபாகரனை கரம்பிடித்தார். மேலும் இந்த திடீர் திருமணத்தால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து இருந்தனர். 

 இந்நிலையில் அனிதா தனது கணவருடன் திருமண வாழ்க்கை குறித்துபேட்டி கொடுத்துள்ளார்.அதில் தாங்கள் இருவரும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் மூன்று வருடங்களாக காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். நான் மிகவும் பிரபலமான ஒருவரையோ அல்லது யாரேனும் நடிகரையோதான் திருமணம் செய்து கொள்வேன் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நான் அதனை ஒருபோதும் விரும்பியதில்லை. எனது கணவர் என்னை மிகவும் நேசிக்கிறார். எங்கள் கையில் பணமே இல்லை என்றாலும் நாங்கள் சந்தோசமாக கைபிடித்து நடப்போம் என கண்ணீருடன் கூறியுள்ளார்

மேலும் திருமணத்திற்கு முன்பே நான் எனது திருமணம் குறித்த செய்தியை வெளியிடலாம் என நினைத்தேன். ஆனால் அப்பொழுது என்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடி ப்ளாக் செய்யப்பட்டிருந்தது.அதனால் திருமணம் குறித்த தகவலை சொல்ல முடியவில்லை. மேலும் திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்பு எனக்கு சிறு விபத்து ஏற்பட்டது. ஆட்டோ ஒன்று காலில் ஏறியதில் கால் நடக்க முடியாமல் நான் அவதிப்பட்டேன். ஆனால் திருமணத்தின்போது அது சரியானது என கூறியுள்ளார்.


Advertisement