சினிமா

அதிரடியாக சீரியலில் களமிறங்கும் அனிதா சம்பத்! அதுவும் எந்த பிரபல சேனலில் பார்த்தீர்களா!!

Summary:

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அனிதா சம்பத். வெள்ளித்திரையிலும் சர்க்கார், காலா, காப்பான் போன்ற திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த அவர் அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா வெளிப்படையாக, பட்டென நேரடியாக தனது கருத்தை தெரிவித்து ஏராளமான விமர்சனங்களை சந்தித்துள்ளார். மேலும் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் அனிதா சம்பத் தற்போது தனது கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் அனிதா சம்பத் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். சமீப காலமாக தொலைக்காட்சித் தொடர்களில் பிக்பாஸ் பிரபலங்கள் கெஸ்ட் ரோலில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் அனிதா சம்பத்தும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவி சீரியலிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


Advertisement