சினிமா

பட்டையை கிளப்பும் மாஸ் கெட்டப்.! தனுஷுக்காக அனிருத் செய்துள்ள காரியத்தை பார்த்தீங்களா!!

Summary:

anirudh post mass getup for thanush birthday

தமி சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். அவருக்கென ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில்  தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வெற்றி பெற்ற படம் வடசென்னை. இப்படத்திற்கு பிறகு அவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகி வரும் படம் அசுரன். இதற்கிடையில் கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் தனுஷ் தனது 39ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். 

அதனை தொடர்ந்து அடுத்தடுத்தாக பல படங்களை கைவசம் வைத்திருக்கும் தனுஷ் தொடர்ந்து பிரபல இயக்குனர்  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. மேலும்  இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தனுஷின் பிறந்தநாள் விரைவில் வரவிருக்கும் நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தனுஷின் அசுரன் கெட்டப் புகைப்படத்தை கொண்ட Common DP ஐ வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 


Advertisement