சினிமா

ப்பா.. வேற லெவல்தான்! பாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சிடுவீங்க போல! டிடியை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ப

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டான ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும், இவர் விருது வழங்கும் விழாக்கள், இசை வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். டிடி தொகுப்பாளினியாக மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் வெள்ளித்திரையிலும் களமிறங்கி 
பவர் பாண்டி, சர்வதாள மயம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தனது கலகலப்பான பேச்சு திறமையால் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் அவர் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்க கூடியவர். அப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவார். இந்த நிலையில் டிடி தற்போது செம மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் பாலிவுட் ஹீரோயின்களில் மிஞ்சிவிடுவீர்கள் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement