ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
கடன் இல்லை! என் தம்பியின் தற்கொலைக்கு காரணம் இதுதான்.. சிக்கிய கடிதம்! நடிகர் ஆனந்தராஜ் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகராகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆனந்தராஜுக்கு 5 தம்பிகள், 2 தங்கைகள் உண்டு. இவர்களில் கடைசி தம்பி கனகசபை. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனி வீட்டில் வசித்து வந்தார். இவர், வட்டிக்கு பணம் கொடுப்பது மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் படுக்கையறைக்கு படுக்க சென்ற அவர் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இந்நிலையில் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை திறந்துபார்த்தபோது அவர் அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் ஆனந்தராஜ் குடும்பத்தையே நிலைகுலைய வைத்தது. இந்நிலையில் கனகசபை உயிரிழப்பதற்கு முன் எழுதிய 4 கடிதம் சிக்கியுள்ளது.
அந்த கடிதத்தில் எழுதியிருப்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ஆனந்த்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், தனது சகோதரர் கனகசபை சமீபத்தில் வீடு ஒன்று வாங்கியுள்ளார். அந்த வீடு குறித்து சிலர் மிரட்டியுள்ளதாக அவர் எழுதி வைத்த கடிதத்தில் விரிவாக உள்ளது. கடன் சுமையால் எனது தம்பி தற்கொலை செய்துகொள்ளவில்லை. மேலும் அந்த கடித்ததில் அவர் தன்னை மிரட்டியவர்களின் பெயரையும் எழுதி வைத்துள்ளார் என ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கனகசபையின் தற்கொலைக்குப் பின்னால் அரசியல்வாதிகள் யாரும் இருக்கிறார்களா என செய்தியாளர்கள் கேட்டபோது தழுதழுத்த குரலில், அரசியல்வாதிகள் நம்மை விட புத்திசாலிகள் என நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து புதுவை மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தனது சகோதரர் தற்கொலைக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ் விசாரணையில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது