சினிமா

கொடிய கொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அமிதாப் பச்சன் தற்போது என்ன செய்கிறார் பார்த்தீர்களா! வியப்புடன் அவரே வெளியிட்ட பதிவு! செம ஹேப்பியில் ரசிகர்கள்!

Summary:

Amitabh bacchan join in shooting of kpc show

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 11ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை தொடர்ந்து அவரது குடும்பத்தார்கள் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் மற்றும் அவர்களது மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

மேலும் நடிகர் அமிதாப்பச்சனும் தொடர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு இம்மாத துவக்கத்தில்தான் வீடு திரும்பினார்.  இந்நிலையில் அவர் சமீபத்தில் கோன் பனேகா குரோர்பதி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 12வது சீசனின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் அமிதாப்பச்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மார்ச் மாதத்திற்கு பிறகு முதன் முறையாக மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். இங்கு எங்கு பார்த்தாலும் நீலநிற பிபிஇ கிட் அணிந்து பணியாற்றி வருகிறார்கள். கேபிசி நிகழ்ச்சி 2000ல் தொடங்கியது. 20 வருடங்கள் ஆகிவிட்டது என வியப்பாக கூறியுள்ளார்.


Advertisement