ஒவ்வொரு கோதுமை மாவு பாக்கெட்டுக்குள்ளும் 15,000 ரூபாய்..! ஏழைகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..! உண்மை என்ன.? அமீர்கான் விளக்கம்.!



Amir khan does not hide 15 thousands in wheat flour

கொரோனா ஊரடங்கு அறிவித்ததில் இருந்தே அரசியல் காட்சிகள் தொடங்கி, சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள்,  சாதாரண மக்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அமிர்கான் சில வாரங்களுக்கு முன் டெல்லியில் ஒருபகுதியில் கோதுமை மாவு பாக்கெட்டிற்குள் 15 ஆயிரம் ரூபாயை மறைத்துவைத்து ஏழை மக்களுக்கு கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. மேலும், இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோவும் சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

இந்த தகவல் காட்டுத்தீ போல் வைரலாக மாறியது. பலரும் நடிகர் அமீர்கானுக்கு தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் கூறிவந்தனர். ஆனால், இந்த தகவல் உண்மையா? அல்லது வதந்தியா என நடிகர் அமீர்கான் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், அந்த தகவல் போலியானது என்றும், தான் அதுபோன்று கோதுமை மாவு பாக்கெட்டிற்குள் மறைத்துவைத்து யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. அது வெறும் வதந்தி என நடிகர் அமீர்கான் தரப்பில் இருந்து தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.