நானும் - அப்பாவும் பணம் இல்லாமல் UnReserve கோச்சில் பயணம் செய்தோம் - மறக்குமா நெஞ்சம்; பிரபல நடிகர் உருக்கமான பதிவு.!Ambani Shankar tweet about Venthu Thaninthathu kadu

 

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் அம்பானி சங்கர். இவர் பல நகைச்சுவை கதாபாத்திரங்களும் நடித்துள்ளார். இவர் அம்பானி படத்தில் கருணாஸுடன் நடித்ததன் மூலம் ரசிகர்களால் கவனிக்கப்பெற்றார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது படத்தில இடம்பெற்றுள்ள "மறக்குமா நெஞ்சம்" என்ற பாடலை பகிர்ந்துள்ளார். 

அத்துடன் சங்கர் "இந்த காட்சியை பார்க்கும்போது கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள் வருகிறது. 2004ல் நான் சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடிவந்த போது தந்தையும், நானும் ரயிலில் அரிசர்வ்ட் கோச்சில் பயணம் செய்த நினைவுகள். "மறக்குமா நெஞ்சம்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.