சினிமா

மும்பை பாடகருடன் அமலாபால் திடீர் திருமணமா! வைரலாகும் புகைப்படங்கள்

Summary:

Amalapal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர் மைனா திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். 

அதன்பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்த அவர் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 

அதனை அடுத்து ஆடை படத்தின் ரீலிஸ் சமயத்தில் தான் ஒரு புதிய உறவில் இருப்பதாக கூறியிருந்தார். அதன் படி தற்போது அமலாபால் காதலித்து வரும் நபர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மும்பையை சேர்ந்த பிரபல பாடகர் பவிந்தர் சிங்கை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அவர்கள் திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.


Advertisement