வீட்டிலேயே புஷ்பாவாக மாறிய அல்லு அர்ஜுன்.! குடும்பத்தினர் கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்.!

வீட்டிலேயே புஷ்பாவாக மாறிய அல்லு அர்ஜுன்.! குடும்பத்தினர் கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்.!


allu arjun surprised

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் நேரடிப் படங்களுக்கு இணையாக வசூல் வேட்டை நடத்தியது புஷ்பா படம்.

புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற அப்படத்தில் அமைந்துள்ள பாடல்களும் ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம். அப்படத்தில் இடம் பெற்றுள்ள ஊ  சொல்றியா மாமா...  பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் சென்சேஷனல் ஹிட்டானது.  இதனால், ‘புஷ்பா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள், பிரபலங்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


 
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்பதால், அதற்கான பணிகளில் இயக்குநர் சுகுமார் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில்,அல்லு அர்ஜுனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரது குடும்பத்தினர் கோடாரியில் கேக் வெட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.