சினிமா

அட.. இந்த நடிகரா! ரோட்டோர கடையில் சாப்பிட்ட பிரபல முன்னணி ஸ்டார்! தீயாய் பரவும் வீடியோ!!

Summary:

தெலுங்கு சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக

தெலுங்கு சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

நடிகர் அல்லு அர்ஜுன் தென்னிந்திய சினிமா நடிகர்களிலேயே மிக அதிக இன்ஸ்டாகிராம் பாலோவர்களை கொண்ட நடிகர் ஆவார். அவர் தற்போது புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது படத்தின் ஷூட்டிற்காக  படக்குழுவினருடன் காரில் சென்றபோது, காரை ஒரு ரோட்டோர கடை முன்பு காரை நிறுத்தி படக்குழுவுடன் சேர்ந்து  சாப்பிட்டுள்ளார். பின்னர் கடைக்காரரிடம் பணம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement