நடிகர் விஜய்யின் தந்தை தொடர்ந்த வழக்கு! அழகிய தமிழ் மகன் தயாரிப்பாளருக்கு 3 மாத சிறை!

நடிகர் விஜய்யின் தந்தை தொடர்ந்த வழக்கு! அழகிய தமிழ் மகன் தயாரிப்பாளருக்கு 3 மாத சிறை!


Alagiya tamil magan director punished 3 month jail

கடந்த 2007ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அழகிய தமிழ்மகன். இப்படத்தில் ஸ்ரேயா, நமீதா, சந்தானம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 
இந்த திரைப்படத்தை ஸ்வர்க்க சித்ரா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அப்பச்சன் தயாரித்திருந்தார். 

மேலும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் படம் வெளியீட்டுக்காக தயாரிப்பாளர் அப்பச்சன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 15 நாட்களில் திருப்பி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் வகையில் அப்பச்சன் கொடுத்த செக் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் இருமுறை திருப்பி வந்ததாக கூறப்படுகிறது.

vijay

இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் அப்பச்சன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஸ்வர்க்க சித்ரா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அப்பச்சனுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரு கோடி ரூபாயை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.