அரிய நோயால் அவதிபட்டு வரும் சமந்தா குணமடைய , மாஜி கணவர் வீட்டிலிருந்து வந்த வாழ்த்து.! யார்? என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

அரிய நோயால் அவதிபட்டு வரும் சமந்தா குணமடைய , மாஜி கணவர் வீட்டிலிருந்து வந்த வாழ்த்து.! யார்? என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!


akil-wish-to-samantha-for-cure-from-disease

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது மியோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இதுகுறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த பிரச்சினை குணமாக கூடுதல் காலமாகும். அதனுடன் நான் போராடி வருகிறேன். விரைவில் பூரண குணமடைந்துவிடுவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர் என தெரிவித்திருந்தார்.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அழகிய நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு
பிரிவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து இருவரும் அவரவர் படவேளைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அரிய வகை நோயால் அவதிப்பட்டு வரும். சமந்தாவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவின் தம்பியும், நடிகருமான அகிலும் வாழ்த்து கூறியுள்ளார். அவர், “டியர் சாம், உங்களுக்கு எனது அனைத்து அன்பும் வலிமையும்" என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Akhil