சினிமா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தில் இணைந்த கோ பட நடிகர்! எந்த படத்தில் தெரியுமா?

Summary:

Ajmal

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அன்றும் இன்றும் நீங்கா இடம் பிடித்தவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பிகில், தர்பார் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் சூப்பர் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் RJ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கோ படத்தில் வில்லனாக நடித்த அஜ்மல் அமீர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement