இதுவரை பார்க்காத தோற்றத்தில் அஜித்! அடுத்த சாதனைக்கு தயாராகும் அஜித் ரசிகர்கள்!

இதுவரை பார்க்காத தோற்றத்தில் அஜித்! அடுத்த சாதனைக்கு தயாராகும் அஜித் ரசிகர்கள்!


ajiths-pink-remake-tamil-movie-name-and-first-look-post

விஸ்வாசம் படத்தின் வெற்றியை அடுத்து பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துவருகிறார் அஜித். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க, இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்குகிறார்.

பிங்க் படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தமிழில் ரிமேக் செய்யப்படுவதால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிங்க் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Ajith Kumar

படத்தில் அஜித், ரெங்கராஜ் பாண்டே, விஷயங் பாலன் ஆகியோர் நடித்துவருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். படம் முவரும் மே மாதம் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியானது.

தமிழ் வெர்ஸனுக்கான தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் படத்தின் தமிழ் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வக்கீல் உடையுடன் அஜித் பிரமாண்டமாக போஸ் கொடுக்க படத்தின் தலைப்பு "நேர்கொண்ட பார்வை" என வைக்கப்பட்டுள்ளது.

Ajith Kumar

படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பொதுவாக அஜித் படம் பற்றிய அறிவிப்பு வெளியானாலே அஜித் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். தற்போது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளதால் அடுத்த சாத்தனிக்கு தயாராகிவிட்டார்கள் அஜித் ரசிகர்கள்.