அஜித்தின் விடாமுயற்சி.! வெளிவந்த புதிய சூப்பரான அப்டேட்! செம குஷியான ரசிகர்கள்!!ajith-vidamuyarchi-movie-new-update

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் இறுதியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அர்பைஜன் நாட்டில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துபாய் மற்றும் சென்னையில் நடத்த படகுழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தில் திரிஷா மற்றும் சம்யுக்தா இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனராம்.

இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்த புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது இப்படத்தில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் அவர் இளமை தோற்றத்தில் நடிக்கிறாராம்.மேலும் படம் மாஸ் சண்டைகள் நிறைந்த அதிரடி கதைக்களத்துடன் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.