அஜித்தின் வலிமை படத்தின் பெயரில் இப்படி ஒரு சுவாரசியமா? என்ன விஷயம் தெரியுமா?

அஜித்தின் வலிமை படத்தின் பெயரில் இப்படி ஒரு சுவாரசியமா? என்ன விஷயம் தெரியுமா?


Ajith valimai movie name secrets

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்குமாரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்டப்பார்வை படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் வினோத்துக்கு மீண்டும் அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தல அஜித்தின்  60வது படமான வலிமை படத்தை இயக்குனர் வினோத் இயக்க உள்ளார். 
இந்த புதிய படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது, பொதுவாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்தின் பெயர்கள் சஸ்பென்சாக வைத்திருக்கப்படும். படம் வெளியாக சில மாதங்களுக்கு முன்னரே படத்தின் பெயர் அறிவிக்கப்படுவது வழக்கம்.

Valimai

ஆனால், அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது. அஜித்தின் 60வது படத்திற்கு வலிமை என்ற பெயர் எப்படி வந்தது என்றால், முதலில் வலிமை என்ற படத்தின் பெயருக்கான உரிமையை கென்யா பிலிம்ஸ் வைத்திருந்தார்களாம்.

இதனை தெரிந்துகொண்ட பட குழு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் செல்வகுமாரிடம் கேட்டுள்ளனர். அவர் தலையின்  தீவிர ரசிகர் என்பதால் எந்தவித மறுப்பும் இன்றி வலிமை என்ற  பெயரை அவர்களிடம் கொடுத்துவிட்டாராம்.