சினிமா

தல அஜித் பற்றிய பல நெகிழ்ச்சியான தகவல்களை கூறிய நடிகர் ராஜ்கிரண்! வைரலாகும் வீடியோ.

Summary:

Ajith raj kiran

தல அஜித் தமிழ் சினிமாவில் கொண்டாடக்கூடிய ஒரு முன்னணி நடிகர். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர்.

தல அஜித் அவர்கள் எளிமையும், தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார். இவர் பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது கிடையாது இருப்பினும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான்.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தை பற்றி நடிகர் ராஜ்கிரண் மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். அதாவது அஜித் அவருடன் நடிக்கும் போது தல எப்போது உட்காராமல் நடத்து கொண்டே தான் இருப்பாராம்.

ஆனால் அதற்கான அர்த்தம் முதலில் தெரியாமல் இருந்தது, அதன் பிறகு தான் அவர் வலியால் அங்கும் இங்கும் நடத்து கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனே நான் அவரிடம் ஓய்வு எடுத்து கொள்ளாமே என கூறினேன்.

அதற்கு அவர் நீங்கள் என் கூடவே இருப்பதால் உங்களுக்கு என் நிலைமை தெரியும். ஆனால் ப்ரொடியூசர் அவர்கள் சென்னையில் இருப்பதால் அவரிடம் எப்படி நான் கேட்க முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் ப்ரொடியூசர் என்னை நேரில் பார்த்திருந்தால் என்னை இரண்டு நாள் கூட ஓய்வு எடுக்க சொல்லிருப்பார். ஆனால் என்னால் முடியும் பார்த்து கொள்ளலாம் என நெகிழ்ச்சியாக கூறியதை கேட்டு ராஜ்கிரண் அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.


Advertisement