சினிமா

திடீரென பயங்கர ஸ்லிம்மாக மாறிய தல அஜித்! ஷாக் புகைப்படம்!

Summary:

Ajith new slim look photo goes viral

விஸ்வாசம் படத்தின் வெற்றியை அடுத்து பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துவருகிறார் அஜித். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான விஸ்வாசம் படம் இன்றுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் பிஸியாக உள்ளார் அஜித்.

இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்க, மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒருசில மாதங்களில் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தல அஜித்தின் புகைப்படம் ஓன்று வைரலாகிவருகிறது. அதற்கு காரணம் அந்த புகைப்படத்தில் அஜித் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக, ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். ஒருவேளை பிங்க் படம் முழுவதும் அஜித் இந்த தோற்றத்தில்தான் இருப்பாரா என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


Advertisement