சினிமா

வெளியானது அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்; ரசிகர்கள் உற்சாகம்

Summary:

ajith new movie name and first look

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் தல அஜித். பிங்க் திரைப்படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றிபெற்றதால், தமிழிலும் மாபெரும் வெற்றிபெறும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். மேலும் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பாண்டேவும் இந்த படத்தில் நடிக்கிறார்.

பில்லா, மங்காத்தா படங்களுக்கு பிறகு அஜித் படத்துக்கு இசை அமைக்கிறார் பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

இந்நிலையில் இந்த புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பெயர் "நேர்கொண்ட பார்வை" ஆகும். மேலும் இந்த படத்தில் வக்கீலாக தோன்றும் அஜித்தின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.


Advertisement