சினிமா

நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையே இல்லை...! நடிகர் தல அஜித்...!

Summary:

ajith-interview-with-press

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மிகவும் பிரபல நடிகர் தல அஜித் குமார். இவர்  தமிழ் சினிமாவின் முக்கிய இடம் பிடித்திருப்பவர் என்றும் கூறலாம். அவருடைய அனைத்து செயல்களும் அனைவரையும் கவரும்படியும் மிகவும் வித்தியாசமாகவும் இருக்கும். ஆனால் நடிகர் தல அஜித் மீது என்றைக்கும் ஒரு குற்றசாட்டு மட்டும் இருந்துகொண்டே தான் இருக்கும். அது என்னவென்றால் அவர் எப்பொழுதும் பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார். குறிப்பாக அவரது பட நிகழ்ச்சியில் கூட அவர் கலந்துகொள்ள மாட்டார். 

இதனையடுத்து நடிகர் தல அஜித் எதனால் பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்ற கேள்வி எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு நடிகர் அஜித் அவர்கள் ஒரு பேட்டியில் பதில் சொன்னது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்றும் கூறலாம். 

அவர் கூறியதாவது: ஒரு நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்று அஜித் பதில் கூறியுள்ளார். இதற்கு பிறகு யாரும் இந்த கேள்வியை கேட்பதில்லை.


Advertisement