புது முயற்சி ஒன்றில் இறங்கியுள்ள தல அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

Ajith in shooting training photos


Ajith in shooting training photos

தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்குபவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் மட்டுமே இந்த உயரத்திற்கு வளர்ந்துள்ளார் தல அஜித். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அஜித்துக்கு ரசிகர் மன்றமே இல்லாத நிலையில் அவருக்குத்தான் அதிகமான ரசிகர்கள் உள்ளனர் என்பது ஆச்சரியமான செய்தி.

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் தல அஜித். பிங்க் படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழிலும் மாபெரும் வெற்றிபெறும் என எதிர்பார்க்க படுகிறது.

Ajith Kumar

சினிமாவையும் தாண்டி அஜித் பல துறைகளில் திறமையானவர். கார் பந்தயம், பைக் ரேஸ், புகைப்படம் என அஜித் பன்முக திறமைகளை கொண்டவர். சில மாதங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு விமான பயிற்சியும் வழங்கினார் தல அஜித்.

இந்நிலையில் அஜித் துப்பாக்கி சுடுவதிலும் ஆர்வம் உள்ளவர் என்பதையும், அதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதையும் பிக் பாஸ் புகழ் ஆர்த்தி புகைப்படமாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.