அந்த மனசு சார்!! இளைஞரின் செல்போனை பிடுங்கிய பின் அஜித் செய்த காரியம்.. வைரல் வீடியோ..

அந்த மனசு சார்!! இளைஞரின் செல்போனை பிடுங்கிய பின் அஜித் செய்த காரியம்.. வைரல் வீடியோ..


Ajith got tension when fan tries to take selfie

செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை அஜித் பிடுங்கி வைத்துக்கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று காலைமுதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் இன்று காலையில் இருந்தே வரிசையில் நின்று வாக்களித்துவருகின்றனர்.

இந்நிலையில் சென்னை திருவான்மியூர்யில் உள்ள வாக்கு பதிவு மையத்திற்கு இன்று காலை 6 . 30 மணிக்கே தனது மனைவியுடன் வந்து வரிசையில் நின்ற தல அஜித் தனது வாக்கினை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவுசெய்தார்.

Ajith

இந்நிலையில் வாக்கு பதிவு மையத்திற்கு வந்த நடிகர் அஜித்தை பார்த்த ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த காவலர்கள், மற்றும் தேர்தல் அதிகாரிகள் ரசிகர்களிடம் கலைந்துபோகும்படி கூறியும் ரசிகர்கள் ரசிகர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்ததால் சில நிமிடங்கள் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் இளைஞர் ஒருவர் அஜித்தின் அருகாமையில் நின்று செல்பி எடுக்க முயன்றார். அதனை பார்த்து கடுப்பான அஜித், அந்த இளைஞரின் கையில் இருந்த செல்போனை வாங்கி தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். பின்னர் தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பும்போது அந்த செல்போனை எடுத்து அந்த இளைஞரிடம் மீண்டும் கொடுத்தார் அஜித்.

அதுமட்டும் இல்லாமல் அங்கிருந்து வெளியே செல்லும்போது அஜித் சார் கூற, ரசிகர்கள் ஓகே சார் என பதில் கூறினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.