சினிமா

யாரும் பார்த்திராத தல அஜித் நடித்த முதல் விளம்பர படம்! எந்த விளம்பரம் தெரியுமா?

Summary:

Ajith first advertisement video

தமிழ் சினிமாவில் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் தல அஜித். எந்த  ஒரு சினிமா பின்ணணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் மட்டுமே இந்த இடத்திற்கு வந்துள்ளார் தல அஜித்.

கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார் அஜித். விஸ்வாசம் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுள்ளது.

விஸ்வாசம் படத்திற்கு பிறகு பிங்க் என்ற ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கிறார் தல அஜித். இந்நிலையில் அஜித் அரசியலுக்கு வருவார் என மக்களும், ரசிகர்களும் எதிர்பார்த்துவந்த நிலையில் தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.

பொதுவாக சினிமாவை தவிர மற்ற இடங்களில் அஜித்தை காண்பது கடினம். பிரஸ் மீட், இசை வெளியீட்டு விழா, கலைநிகழ்ச்சி என அஜித் எங்கும் செல்வது இல்லை. சினிமா தவிர விளம்பர படங்களில் கூட அஜித் நடிப்பது இல்லை.

இந்நிலையில் அஜித் நடித்த முதல் விளம்பர படம் பற்றிய வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது. நடிகை சிம்ரனுடன் நெஸ்கபே காபி விளம்பரத்தில் நடித்துள்ளார். ஆனால், அதற்கு முன்னதாக மியாமி ஹுசைன் செருப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார் தல அஜித். இதோ அந்த வீடியோ.


Advertisement