மகன் சஞ்சய் எப்படி இருக்கான் விஜய்.? போன் செய்து விசாரித்த தல அஜித்.! பூரித்துப்போன விஜய்..!

மகன் சஞ்சய் எப்படி இருக்கான் விஜய்.? போன் செய்து விசாரித்த தல அஜித்.! பூரித்துப்போன விஜய்..!


ajith-call-vijay-and-ask-about-his-son-sanjay

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வரும் மே 3 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் மிக சோகத்தில் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வைரலாகிவருகிறது.

அதற்கு காரணம், விஜய் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்கி வந்த நிலையில், சினிமா தொடர்பான மேற்படிப்புக்காக அவர் கனடாவுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் கொரோனா, ஊரடங்கு, வெளிநாட்டில் சிக்கியிருக்கும் மகன் இவை அனைத்தும் விஜய் குடும்பத்தை கவலையில் ஆழ்த்தியது.

vijay

இந்த தகவல் மீடியா மூலம் அஜித்துக்கு தெரியவர, உடனே தனது நண்பன் விஜய்க்கு போன் செய்து, சஞ்சய் எப்படி இருக்கான்? கனடாவில் அவன் இருக்கும் சூழல் எப்படி இருக்கிறது என விஜய்யிடம் விசாரித்துள்ளார் தல அஜித். இந்த தகவல் விஜய்க்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தற்போது வெளியே வைரலாகிவருகிறது.